#PAKvsSA நோர்க்யாவின் பவுலிங்கில் சுருண்ட பாகிஸ்தான்..! தென்னாப்பிரிக்கா மறுபடியும் பேட்டிங்கில் சொதப்பல்

By karthikeyan VFirst Published Feb 5, 2021, 4:32 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 272 ரன்களுக்கு சுருண்டது.
 

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.

தொடக்க வீரர்கள் இம்ரான் பட், அபித் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அசார் அலி டக் அவுட்டானார். பாபர் அசாமுடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஃபவாத் ஆலம் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிஸ்வான் 18 ரன்களில் வெளியேறினார். 

சிறப்பாக ஆடி அரைசதமடித்த கேப்டன் பாபர் அசாம் 77 ரன்களுக்கு அவுட்டாக, கடைசி வரை இன்னிங்ஸை கட்டி இழுத்த ஃபஹீம் அஷ்ரஃப் 78 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்துவீசி அசத்திய நோர்க்யா அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் டெஸ்ட்டை போலவே இந்த போட்டியிலும் பேட்டிங்கை மட்டமாக தொடங்கியது.

தொடக்க வீரர் மார்க்ரம் 11 ரன்களுக்கு ஹசன் அலியின் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து களத்திற்கு வந்த வாண்டர் டசன் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். 26 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட, எல்கரும் டுப்ளெசிஸும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

click me!