#INDvsENG அரிதினும் அரிதான பிளேயர் அவரு.. அவரை டீம்ல எடுக்காதது பெரிய சர்ப்ரைஸ்..! கம்பீர் அதிருப்தி

By karthikeyan VFirst Published Feb 5, 2021, 4:01 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் எடுக்கப்படாதது குறித்த அதிருப்தியை கம்பீர் வெளிப்படுத்தியுள்ளார்.
 

ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவுக்கு, பெரும்பாலான வீரர்கள் காயமடைந்த போதிலும், கடைசி வரை ஆடும் லெவனில் வாய்ப்பே கிடைக்கவில்லை. அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவருமே ஆடாத ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் கூட வாஷிங்டன் சுந்தர் தான் அணியில் எடுக்கப்பட்டாரே தவிர குல்தீப் யாதவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அணி காம்பினேஷனை கருத்தில்கொண்டு குல்தீப் யாதவை அணியில் எடுக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்த பவுலிங் கோச் பரத் அருண் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையளித்தார்.

ஆனால் சென்னையில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் குல்தீப் யாதவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகிய 3 ஸ்பின்னர்களும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். இப்போதுகூட குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் ஆச்சரியம் தான்.

இந்நிலையில், குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டது குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் கவுதம் கம்பீர். இதுகுறித்து கிரிக்பஸ் இணையதளத்திடம் பேசிய கம்பீர், குல்தீப் எடுக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. குல்தீப்பை கண்டிப்பாக அணியில் எடுத்திருக்க வேண்டும். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் அரிதினும் அரிதான ரகம். நிறைய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியிருக்கிறார்கள். 2 ஆஃப் ஸ்பின்னர்களை எடுத்துவிட்டு, ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப்பை புறக்கணித்தது துரதிர்ஷ்டவசமானதுதான்.  பேட்டிங் டெப்த்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டிய கம்பீர், ஆனாலும் குல்தீப்பின் புறக்கணிப்பு குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

click me!