உலகக் கோப்பை தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு – ரவி சாஸ்திரி!

By Rsiva kumar  |  First Published Jun 25, 2023, 10:55 AM IST

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தான் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிக்கு கடைசி வாய்ப்பு என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதே போன்று இதற்கு முன்னதாக ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்க இருக்கிறது.

சீகம் மதுரை பாந்தர்ஸ் ஃபர்ஸ்ட் வெற்றி: புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

Tap to resize

Latest Videos

இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அப்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தால், சர்மா, தனது கேப்டன் பதவியை இழக்க நேரிடும். இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனானது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

முதல் கோல் அடித்த மகேஷ் நௌரேம் சிங்: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

அதுமட்டுமின்றில் டி20 போட்டிகளில் பல தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை ரெடி; ஜூன் 27ல் வெளியீடு!

இதற்கு முன்னதாக நடந்த டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!