ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகள் இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடக்கிறது. இன்று மட்டுமே 3 போட்டிகள் நடக்கிறது. வார்ம் அப் போட்டிகளைத் தொடர்ந்து, 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?
இந்த நிலையில் வீரர்களின் உணவு மருத்துவ வசதிக்கு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமின்றி ஜிம், நீச்சல் குளம், யோகா ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்காக இந்தியா வந்துள்ளது அனைத்து அணிகளுக்கும் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மட்டன், சிக்கன், மீன் வகைகள், காய்கறிகள் கொண்ட உணவு வகைகளை செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பாஸ்மதி அரிசி சாப்பாடு, ஹைதராபாத் பிரியாணி வகைகள் கொண்ட உணவு பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாநிலங்களிலும் கிடைக்கும் உணவுகளையும், வீரர்கள் விரும்பக் கூடிய உணவுகளையும் சமைத்து தர சமையல் கலைஞர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், வெளிநாட்டு உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லப்படுகிறது.
With beef not available to all the 10 participating teams in India, Pakistan team's diet chart is made up of a diverse menu to meet their daily protein requirements
Read More: https://t.co/8mgmVL87p1 pic.twitter.com/U8VMJy0EHN