IPL 2023: கேகேஆர் அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்..!

By karthikeyan VFirst Published Mar 27, 2023, 7:01 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆர் அணியின் இடைக்கால கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். 
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய இருபெரும் சாம்பியன் அணிகளுக்கு அடுத்த வெற்றிகரமான அணி கேகேஆர் தான்.

கௌதம் கம்பீரின் கேப்டன்சியில் 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வென்ற வெற்றிகரமான அணி கேகேஆர். கம்பீர் கேகேஆர் அணியிலிருந்துவிலகியபின், 5 சீசன்களாக கேகேஆர் அணி பெரிதாக சோபிக்கவில்லை. 

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா..? மாட்டாரா..? ரவி சாஸ்திரி கருத்து

2022ம் ஆண்டு ஐபிஎல்லில் ஷ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணியின் கேப்டன்சியை ஏற்றார். இந்த சீசனிலும் ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் அசத்தலாக ஆடி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தது கேகேஆர் அணி. ஆனால் முதுகு காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனின் முதல் பாதியில் ஆடவில்லை. பாதி சீசனுக்கு மேல் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார். 

அதனால் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இணையும் வரை கேகேஆர் அணியின் இடைக்கால கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஷ் ராணா ஐபிஎல்லில் 91 போட்டிகளில் ஆடி 2181 ரன்கள் அடித்துள்ளார். ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடிய ராணா, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

டி காக் சதம்; தென்னாப்பிரிக்கா காட்டுத்தனமான பேட்டிங்! டி20-யில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை செய்து வரலாற்று சாதனை

கேகேஆர் அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா(இடைக்கால கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் ஷர்மா, டேவிட் வீஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மந்தீப் சிங், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன்.

click me!