BAN vs IRE: முதல் டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி

Published : Mar 27, 2023, 06:34 PM IST
BAN vs IRE: முதல் டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது வங்கதேச அணி.  

அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடரை வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங் (கேப்டன்), ரோஸ் அடைர், லார்கன் டக்கெர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், காரெத் டிலானி, மார்க் அடைர், கிரைக் யங், கிரஹாம் ஹும், பெஞ்சமின் ஒயிட்.

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா..? மாட்டாரா..? ரவி சாஸ்திரி கருத்து

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ரோனி தலுக்தர், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), டௌஹிட் ரிடாய், ஷமிம் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், நசும் அகமது, டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ரோனி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 91 ரன்களை குவித்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடிய லிட்டன் தாஸ் 23 பந்தில் 47 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரோனி 38 பந்தில் 67 ரன்கள் அடித்தார். ஷமிம் ஹுசைன் 20 பந்தில் 30 ரன்கள் அடித்தார். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 13 பந்தில் 20 ரன்கள் அடிக்க, 19.2 ஓவரில் வங்கதேச அணி 207 ரன்கள் அடித்த நிலையில், மழை குறுக்கிட்டதால் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது.

இந்தூர் பிட்ச் படுமட்டம்லாம் இல்ல.. தீர்ப்பை திருத்தி எழுதிய ஐசிசி.! பிசிசிஐ-யின் அப்பீலுக்கு கிடைத்த வெற்றி

மழை நின்று ஆட்டம் மீண்டும் தாமதமாக தொடங்கப்பட்டதால், டி.எல்.எஸ் முறைப்படி 8 ஓவரில் 104 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் பால் ஸ்டர்லிங் (17), ரோஸ் அடைர் (13), ஹாரி டெக்டார் (19), காரெத் டிலானி(21) ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, 8 ஓவரில் 81 ரன்கள் அடித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகித்தது.

PREV
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!