ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக இடைக்கால கேப்டனாகும் ஷர்துல் தாக்கூர், உண்மையாவா?

By Rsiva kumarFirst Published Mar 27, 2023, 5:06 PM IST
Highlights

ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் பாதியில் கலந்து கொள்ளாத நிலையில் அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் இடைக்கால கேப்டனாக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலத்திற்கு ஏற்ப கிரிக்கெட் போட்டியை மாற்றியமைக்க வேண்டும் என்பது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருந்து வருகிறது. டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டை விட டி20 போட்டிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் என்று சொல்லப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

BCCI Contract List: ரூ.7 கோடிக்கு சம்பளம் உயர்வு பெற்ற ஜடேஜா; ரூ.3 கோடிக்கு குறைந்த கேஎல் ராகுல் சம்பளம்!

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அதற்கு முன்னதாக வரும் 30 ஆம் தேதி அனைத்து அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் பாதியில் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்குப் பதிலாக யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்து வருகிறது. 

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சிறந்த கேட்ச் ஆஃப் தி சீசன்; யஷ்டிகா பாட்டீயாவிற்கு வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை!

இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஷர்துல் தாக்கூர் இடைக்கால கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொல்கத்தா அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் வரிசையில் உள்ள சுனில் நரைனுக்கு கேப்டனாகும் அனைத்து தகுதிகளும் உள்ள நிலையில், கொல்கத்தா அணி இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் வரிசையில் உள்ள தாக்கூர் பக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு தங்கம் வென்று அசத்தல்!

என்னும், சர்வதேச லீக் T20 (ILT20) இன் ஆரம்ப போட்டியின் போது கேகேஆரின் சகோதரி உரிமையாளரான  அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ​​சுனில் நரைன் இருந்துள்ளார். 10 போட்டிகளில் விளையாடிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இன்னும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள், கேகேஆர் தனது புதிய கேப்டனை ஒரு பிரமாண்ட விழாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிகழ்வில் கேகேஆரின் உரிமையாளரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஒரு வெளிநாட்டு பாப் நட்சத்திரம் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டிகள்:

ஏப்ரல் 1 - பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 6 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 7.30 மணி

ஏப்ரல் 9 - குஜராத் டைட்டஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 14 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - இரவு 7.30 மணி

ஏப்ரல் 16 - மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 20 - டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 7.30 மணி
 
ஏப்ரல் 23 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 7.30 மணி

ஏப்ரல் 26 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 7.30 மணி

ஏப்ரல் 29 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் - பிற்பகல் 3.30 மணி

மே 4 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 7.30 மணி

மே 8 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் - இரவு 7.30 மணி

மே 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 7.30 மணி

மே 14 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 7.30 மணி

மே 20 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் - இரவு 7.30 மணி

click me!