NZ vs IND: 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு..! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Nov 27, 2022, 4:39 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சனை ஆடவைக்காத இந்திய அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டிக்கானை இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. சஞ்சு சாம்சன் மற்றும் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே தீபக் ஹூடா மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

உலக கோப்பையை ஜெயிக்கணும்னா ஐபிஎல்லில் ஆடாதீங்க..! ஒரே போடாய் போட்ட ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர்

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஷிகர் தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4.5 ஓவரில் இந்திய அணி 22 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, 12.5 ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால் அத்துடன் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. கில் 45 ரன்களுடனும், சூர்யகுமார் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டி ரத்தானதால் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியில் இந்தியா ஜெயித்தாலும் தொடர் சமன் தான் ஆகுமென்பதால், தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்துவிட்டது. கடைசி போட்டியில் நியூசிலாந்து ஜெயித்தால் அந்த அணி தொடரை வென்றுவிடும்.

முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய சஞ்சு சாம்சனை இந்த போட்டியில் உட்காரவைத்ததை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்காததே அநீதி என ரசிகர்கள் கொந்தளித்தனர். திறமையான வீரரான சஞ்சு சாம்சனுக்கு தொடர் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுந்தன. அதன்விளைவாக முதல் ஒருநாள் போட்டியில் அவரை ஆடவைத்தனர். அந்த போட்டியில் நன்றாக ஆடி 36 ரன்கள் அடித்தார். ஆனால் எந்த தவறுமே செய்யாத சஞ்சு சாம்சனை வழக்கம்போலவே மீண்டும் புறக்கணித்தது இந்திய அணி நிர்வாகம்.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

சஞ்சு சாம்சனை உட்காரவைத்த அதிருப்தியில் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாகவும், இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர். மேலும் சஞ்சு சாம்சனை உட்காரவைத்ததால் தான், இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதாகவும், இதுதான் கர்மா என்றும் ரசிகர்கள் விளாசிவருகின்றனர். 
 

click me!