
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும். இப்போதைக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகள் தான் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 4-0 என ஒயிட்வாஷ் செய்து, நியூசிலாந்து - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இலங்கை வென்றால் ஆஸ்திரேலிய அணி வெளியேறிவிடும். இலங்கை அணி ஃபைனலுக்கு தகுதிபெறும்.
அந்தவகையில் நியூசிலாந்து - இலங்கை இடையேயான டெஸ்ட் தொடர் மிக முக்கியமான தொடர். இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
இலங்கைக்கு எதிரான இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றாலும், 2வது டெஸ்ட்டில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில், அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் நியூசிலாந்து அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் டஃபி ஆகிய வீரர்கள் இடம்பெறவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஷ்வின்..!
இலங்கை தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி:
டிம் சௌதி (கேப்டன்), டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்ரி, டாம் லேதம், டேரைல் மிட்செல், பிளைர் டிக்னெர், நீல் வாக்னெர், ஸ்கார் குஜெலின், ஹென்ரி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.