
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடந்தது.
இந்தியா:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்) ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியா: டிரேவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மேத்யூ குன்மேன், மார்னஸ் லபுசேஞ்ச், நாதன் லையன், டோட் முர்ஃபி, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க்
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா (12), சுப்மன் கில் (21), சட்டீஸ்வர் புஜாரா (1), விராட் கோலி (22), ரவீந்திர ஜடேஜா (4), ஷ்ரேயாஸ் ஐயர் (0), ஸ்ரீகர் பரத் (17), அக்ஷர் படேல் (12), உமேஷ் யாதவ் (17) என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நோபால் எல்லாம் அப்புறம் தான்: 500 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் பந்து வீச்சில் மேத்யூ குன்மேன் 5 விக்கெட் கைப்பற்றினார். நாதன் லயான் 3 விக்கெட்டும், டோட் முர்ஃபி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், டிரேவிஸ் ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா நிலைத்து நின்று ஆடி 60 ரன்கள் சேர்த்தார். மார்னஸ் லபுசேஞ்ச் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்னுடனும், கேமரூன் க்ரீன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உன் குத்தமா, என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல - ஆஸி., சுழலுக்கு சிக்கி சின்னா பின்னமான இந்தியா!