கண்ணாமூச்சி விளையாடும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? சச்சின் வெளியிட்ட சிறுத்தை வீடியோ!

Published : Mar 01, 2023, 12:20 PM IST
கண்ணாமூச்சி விளையாடும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? சச்சின் வெளியிட்ட சிறுத்தை வீடியோ!

சுருக்கம்

வன பகுதிக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர் சிறுத்தையின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் உலகில் கடவுள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை புரிந்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எப்போதெல்லாம் வெளியில் செல்கிறாரோ அப்போதெல்லாம் புகைப்படம், வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

முதல் பந்திலேயே ரோகித் சர்மா கேட்ச், அம்பயரும் அவுட் கொடுக்கல - ரெவியூ கேட்காமல் கோட்டை விட்ட ஆஸ்திரேலியா!

அப்படி அவர் வெளியிட்டு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்கு சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர் அப்போது, சிறுத்தையின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு, கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

உன் குத்தமா, என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல - ஆஸி., சுழலுக்கு சிக்கி சின்னா பின்னமான இந்தியா!

நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதனுடன் விளையாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதே போன்று உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக வாழ்நாள் முழுவதும் நாம் மாணவர்கள் தான். சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை மூலமாக குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் உள்பட பலவற்றை குறித்த கண்ணோட்டத்தை பெற இன்று அற்புதமான வாய்ப்பு. உலகின் சவால்களைத் தீர்க்க யோசனைகளை பகிர்ந்து கொள்வது ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

Ind vs Aus 3rd test: சாதிக்கப்போகும் அஸ்வின்? ஃபார்ம் இல்லாமல் தடுமாறும் கோலி! 3வது டெஸ்டில் என்ன நடக்கும்?

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

நியூசிக்கு எதிராக 4 இமாலய சாதனை படைத்த கிங் கோலி..! தொடரை இழந்தாலும் ரசிகர்கள் ஆறுதல்
IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!