
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்டது. இனி ஒயிட்வாஷ் ஆகாமல் மரியாதயுடன் நாடு திரும்பும் முனைப்பில் அந்த அணி உள்ளது.
2004ம் ஆண்டுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆஸ்திரேலிய அணியின் கனவு தகர்ந்தது. அதேவேளையில், இந்தூரில் நாளை(மார்ச்1) தொடங்கும் 3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 15வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும்.
ஆசியாவில் 126 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன், இன்னும் 2 விக்கெட் வீழ்த்தினால், ஆசியாவில் அதிக விக்கெட் வீழ்த்திய ஷேன் வார்னின் (127 விக்கெட்) சாதனையை முறியடிப்பார்.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
உத்தேச ஆஸ்திரேலிய அணி:
உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, மேத்யூ குன்னெமன்.