தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர ரச்சின் ரவீந்திரா முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 4ஆம் தேதியான இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியில் டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கான்வே ஒரு ரன்னில் வெளியேற லாதம் 20 ரன்களில் நடையை கட்டினார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவிந்திரா இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், கேன் வில்லியம்சன் 243 பந்துகளில் 102 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டான் பிராட்மேன் 29 சதங்கள் சாதனையை முறியடித்துள்ளார். பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்கள் அடித்திருந்தார்.
ஆனால், வில்லியம்சன் 97ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30ஆவது சதம் அடித்து பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார். தொடர்ந்து விளையாடிய வில்லியம்சன் 259 பந்துகளில் 112 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். இதே போன்று இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடிய ரச்சின் ரவீந்திரா தன்னை ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக நிரூபித்துள்ளார்.
India vs England 2nd Test: 8ஆவது முறையாக காலி செய்த பும்ரா - கோபத்தில் கொந்தளித்த ரூட்!
இதன் காரணமகா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தான் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இதுவரையில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவீந்திரா 211 பந்துகளில் 118 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார். இதில், 13 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.