பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வந்த 10 அணிகளும் முதலில் வார்ம் அப் போட்டிகளில் விளையாடுகின்றன. 10 அணிகளுக்கான வார்ம் அப் போட்டி இன்று தொடங்கியது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
No Beef: மாட்டிறைச்சிக்கு தடை: சிக்கன், மட்டன், மீன், வீரர்கள் விரும்பும் உணவுகளுக்கு அனுமதி!
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையிலான 3ஆவது வார்ம் அப் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில், டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது. இதில், முகமது ரிஸ்வான் 103 ரன்கள் எடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
பாபர் அசாம் 80 ரன்கள் எடுக்க, சவுத் சகீல் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக பாகிஸ்தான் 345 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 54 ரன்களிலும், டேரில் மிட்செல் 59 ரன்களிலும் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் நடையை கட்டினர்.
ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?
மார்க் சாப்மேன் 65 ரன்களும், ஜேம்ஸ் நீசம் 33 ரன்களும் எடுக்கவே நியூசிலாந்து 43.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக உலகக் கோப்பை தொடரின் வார்ம் அப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. வரும் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது வார்ம் அப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுகிறது.
இதே போன்று நியூசிலாந்து தனது 2ஆவது வார்ம் அப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 2ஆம் தேதி நடக்கிறது.