பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முதல் முறையாக இந்தியாவிற்கு வந்துள்ள நிலையில், உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் அரைசதம் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் 3 ஆம் தேதி வரையில் வார்ம் அப் போட்டியில் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கிய வார்ம் அப் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதின.
No Beef: மாட்டிறைச்சிக்கு தடை: சிக்கன், மட்டன், மீன், வீரர்கள் விரும்பும் உணவுகளுக்கு அனுமதி!
இதில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் கடைவிடப்பட்டது. இதே போன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது வங்கதேச அணி விளையாடி வருகிறது. இதே போன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்று ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 345 ரன்கள் குவித்தது. இதில், முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி 94 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கல் உள்பட 103 ரன்கள் குவித்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?
இதே போன்று முதல் முறையாக இந்தியா வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 84 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா வந்து தனது முதல் வார்ம் அப் போட்டியில் விளையாடிய பாபர் அசாம் அரைசதம் அடித்துள்ளார்.