பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று வென்றுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி இன்று நடந்தது.
எஸ்ஏ20 லீக் தொடர் – சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி, துள்ளிக் குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்!
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒருபுறம் அவர் அதிரடியாக விளையாட மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
முதலில் ஜிம் ஒர்க் அவுட், இப்போ யோகா பயிற்சி - வைரலாகும் ஹர்திக் பாண்டியா புகைப்படம்!
கடைசியாக ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரி, 16 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் 16 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக, டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய், கிரஹாம் நேப்பியர் மற்றும் தசுன் ஷனாகா ஆகியோரது 16 சிக்ஸர்கள் சாதனையை சமன் செய்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் மட்டுமே 18 மற்றும் 17 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இறுதியாக நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மட்டுமே அரைசதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி வரும் 19 ஆம் தேதி கிறிஸ்ட்சர்சில் தொடங்குகிறது.