இலங்கைக்கு எதிரான 19ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் 4 இடங்களை பிடிக்க ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இந்தியா விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்த ஆஸ்திரேலியா தற்போது 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி அடைந்து 4ஆவது இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி அடைந்து 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று 8ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இலங்கை கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தான் லக்னோவில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி தற்போது நடக்கிறது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், இலங்கை அணியில், துனித் வெல்லலகே, லகிரு குமாரா ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில் அவர்களுக்குப் பதிலாக துஷான் ஹேமந்தா மற்றும் கசுன் ரஜிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே தசுன் ஷனாகா காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார்.
இலங்கை:
பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனன்ஜெயா டி சில்வா, சமீகா கருணாரத்னே, துஷான் ஹேமந்தா, மகீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷன் மதுஷங்கா.
நெதர்லாந்து:
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், அதிகபட்சமாக 443 ரன்கள் எடுத்துள்ளது. லக்னொ மைதானத்தில் இந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா 311 ரன்கள் குவித்தது. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு முறையும், 2ஆவது பேட்டிங் செய்த ஒரு அணியும் வெற்றி பெற்றுள்ளன.