வஙகதேச அணிக்கு எதிரான 28ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 28ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் குவித்தார். வெஸ்லி பாரேஸி 41 ரன்கள் சேர்க்க, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 35 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஷ்தபிஜூர் ரஹ்மான், மஹெதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட் கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து தன்ஷித் ஹசன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 9 ரன்னிலும், ஷாகிப் அல் ஹசன் 5 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் முகமதுல்லா 20 ரன்னிலும், மஹெதி ஹசன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய தஸ்கின் அகமது 11 ரன்னிலும், முஷ்டபிஜூர் ரஹ்மான் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக வங்கதேச அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. நெதர்லாந்து 2 வெற்றிகளுடன் 8ஆவது இடம் பிடித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நெதர்லாந்து அணியில் பால் வான் மீகெரென் 4 விக்கெட்டுகளும், பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளும், ஆர்யன் தத், லோகன் வான் பீக் மற்றும் கொலின் அக்கர்மேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Australia vs New Zealand: தொடர்ந்து 3ஆவது முறையாக 350 ரன்களுக்கு மேல் குவித்து ஆஸ்திரேலியா சாதனை!