நியூசிலாந்திற்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 27ஆவது லீக் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரது அதிரடியால் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 109 ரன்களும், டேவிட் வார்னர் 81 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே மற்றும் வில் யங் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைக்கவில்லை. முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. கான்வே 28 ரன்னிலும், யங் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர், 89 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உள்பட 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதே போன்று டேரில் மிட்செல் தன் பங்கிற்கு அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர், 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் லாதம் 21 ரன்களில் ஆட்டமிழக்க கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் சான்ட்னர் 17 ரன்களிலும், மேட் ஹென்றி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடியா ஜேம்ஸ் நீசம் 39 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Australia vs New Zealand: தொடர்ந்து 3ஆவது முறையாக 350 ரன்களுக்கு மேல் குவித்து ஆஸ்திரேலியா சாதனை!
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்தை வைடாக வீசினார். மேலும் பவுண்டரிக்கும் சென்றது. இதன் மூலமாக 5 ரன்கள் கிடைத்தது. மறுபடியும் வீசப்பட்ட முதல் பந்தில் டிரெண்ட் போல்ட் 1 ரன் எடுத்தார். இதையடுத்து தொடர்ந்து யார்க்கராக வீசப்பட்ட 3 பந்துகளும் 2, 2, 2, என்று 6 ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தை புல்டாஸாக வீசவே, 2 ரன்கள் எடுக்க ஓடிய நீசம் ரன் அவுட்டாகி வெளியேறினார். கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதன் மூலமாக நியூசிலாந்து 5 ரன்களில் தோல்வி அடைந்தது. எனினும், புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தரம்சாலாவில் சிக்ஸர் மழை – வான வேடிக்கை காட்டிய வார்னர், டிராஸ் ஹெட் – ஆஸி, 388 ரன்கள் குவிப்பு!
நியூசிலாந்து விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.