ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் அறிமுகமான நேபாள் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதில், நேபாள் நாட்டைச் சேர்ந்த பாடகியான திரிஷாலா குரூங் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஐமா பேக் ஆகியோரது இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள் என்று 6 அணிகள் இடம் பெறும் இந்த ஆசிய கோப்பை 2023 லீக் தொடரில் முதல் முறையாக நேபாள் அணி அறிமுகமாகியுள்ளது. அதுவும், தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நேபாள் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமானின் முதல் விக்கெட்டை நேபாள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கரண் கேசி கைப்பற்றினார். தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ரன் முறையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர்.
Asia Cup 2023: 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 இன்று தொடக்கம்!
முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் நேபாள் அணியை பார்ப்பதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தானின் முல்தான் பகுதிக்கு அதிகளவில் வருகை தந்துள்ளனர்.