இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் நிலையில் நீயா நானா கோபிநாத், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உடன் இணைந்து கிரிக்கெட் வர்ணனை செய்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், நேற்று தான் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலையானது திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து சச்சின் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இருவரும் இந்தப் போட்டியை காண வருகை தந்துள்ளனர்.
சொந்த மண்ணில் ஜாம்பவான் முன்னாடி சொற்ப ரன்களில் வெளியேறிய ரோகித் சர்மா!
அதுமட்டுமின்றி போட்டி தொடங்குவதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் மற்றும் முத்தையா முரளிதரன் இருவரும் இணைந்து உலகக் கோப்பை டிராபியை கொண்டு வந்து மைதானத்தில் வைத்தனர். இந்த நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியின் சார்பில் கிரிக்கெட் வர்ணனை செய்துள்ளார்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், முத்துராமன் ஆர், சஷ்திகா ராஜேந்திரன், கௌதம் தவமணி, சுப்ரமணியம் பத்ரிநாத், யோ மகேஷ் விஜயகுமார், எஸ் ரமேஷ், விஷ்ணு ஹரிஹரன், முரளி விஜய், கேவி சத்தியநாராயணன், பாலாஜி, பட்டுராஜா ரஸ்ஸல் அர்னால்டு, ஹேமங் பதானி ஆகியோர் கிரிக்கெட் வர்ணனை செய்கின்றனர். இவர்களது வரிசையில் தற்போது விஜய் டிவி நீயா நானா கோபிநாத் கிரிக்கெட் வர்ணனை செய்துள்ளார்.
இந்தியா ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேறும் – டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு!