தோனி சொன்ன அறிவுரை எனக்கு இன்றைக்கும் பயன்படுகிறது..! நடராஜன் ஓபன் டாக்

Published : Apr 07, 2021, 04:29 PM IST
தோனி சொன்ன அறிவுரை எனக்கு இன்றைக்கும் பயன்படுகிறது..! நடராஜன் ஓபன் டாக்

சுருக்கம்

ஐபிஎல் 13வது சீசனில் தனக்கு தோனி சொன்ன அறிவுரை என்னவென்று நடராஜன் கூறியுள்ளார்.  

ஐபிஎல் 13வது சீசனில் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடராஜனின் அபாரமான பவுலிங், சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்தது.

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக, ஆஸி., சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய அனைத்துவிதமான போட்டிகளிலும் அறிமுகமாகி, அனைத்து ஃபார்மட்டிலும் அசத்தி, இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவினார்.

இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக ஆடிய நடராஜன், ஐபிஎல் 14வது சீசனை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில், ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், கடந்த சீசனில் தோனி தனக்கு கூறிய அறிவுரை என்னவென்று கூறியுள்ளார்.

அதுகுறித்து பேசிய நடராஜன், கடந்த சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஒரு பந்தை ஸ்லாட்டில் பிட்ச் செய்தேன்; அதை சிக்ஸர் விளாசினார் தோனி. அடுத்த பந்திலேயே தோனியை வீழ்த்தினேன். ஆனால் நான் தோனியின் விக்கெட்டை கொண்டாடவில்லை. அதற்கு முன் வீசிய பந்தை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.

அந்த போட்டிக்கு பின், தோனியுடன் பேசினேன். தோனியுடன் பேசுவதே பெரிய விஷயம் தான். அவர் ஃபிட்னெஸ் பற்றி என்னிடம் பேசியதுடன், என்னை உத்வேகமும் படுத்தினார். ஸ்லோ பவுன்ஸர்கள், கட்டர்கள் என நல்ல வேரியேஷனுடன் வீசுங்கள் என்றார். அது எனக்கு மிகவும் பயன்படுகிறது என்று நடராஜன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?
3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்