நடராஜனுக்கு கையில் காயம்: கிரிக்கெட் மைதானம் திறந்த போது எதிர்பாராமல் நடந்த விபரீதம்!

By Rsiva kumar  |  First Published Jun 24, 2023, 6:38 PM IST

சேலம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் அகாடமி திறந்த வைத்த போது எதிர்பாராத வகையில் நடராஜனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் மூலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானவர் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த டி நடராஜன். அதன் பிறகு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளும், 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளும், 4 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.

பாபா அபராஜித்தின் அதிரடியால் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 159 ரன்கள் குவிப்பு!

Tap to resize

Latest Videos

இது தவிர, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் ஐபிஎல் தொடர்களில் 47 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடும் அளவிற்கு இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.

 

❤️ https://t.co/umut7E8aj7

— Natarajan (@Natarajan_91)

 

இந்த நிலையில், தனது கிராமத்தில் இனிமேல் தன்னைப் போன்று கிரிக்கெட் ஆர்வம் கொண்ட இளம் வீரர்கள் யாரும் கஷ்டப்பக் கூடாது என்பதற்காக நடராஜன் கிரிக்கெட் மைதானம் (NATARAJAN CRICKET GROUND) ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இந்த மைதானத்தை திறந்து வைத்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்; வீடியோ காலில் விஜய் சங்கர்!

அப்போது பேசிய தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஏராளமானோர் விளையாடி இருக்கிறார்கள். நானும் நீண்ட காலமாக விளையாடி இருக்கிறேன். ஆனால், எனக்கு இப்படி ஒரு மைதானம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் வந்ததே இல்லை. தன்னைப் போன்று மற்றவர்களும் மிகப்பெரிய வீரர்களாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடராஜன் இந்த மைதானத்தை கட்டியிருக்கிறார். தான் பெற்றதை இந்த சமூகத்திற்கு கொடுக்கும் நோக்கத்தில் இப்படியொரு மைதானத்தில் அவர் உருவாக்கியிருக்கிறார். இதுவே அதற்கான சாட்சி என்று கூறியுள்ளார்.

TNPL 2023: முதலிடம் பிடிக்குமா நெல்லை? டாஸ் வென்ற சேப்பாக்கம் பேட்டிங்!

நடராஜன் கூறியிருப்பதாவது: தன்னைப் போன்று யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவும், அண்டர் 14, அண்டர்16, அண்டர்19 என்று இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Hearty Congratulations Nattu .There can't be a better inspiring story than yours. I have no doubts that the stepping stones that you have laid today is going to motivate and pave the way for lots of immensely talented players from all parts to make it big just like you did. pic.twitter.com/EfFdLxBUuh

— Hemang Badani (@hemangkbadani)

 

இந்நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, காமெடி நடிகர் யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு: ஓரங்கட்டப்பட்ட சர்பராஸ் கான், ஹனுமா விஹாரி!

இந்த நிலையில், மைதானம் திறப்பு விழாவின் போது நடராஜனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கதவு இடுக்கில் சிக்கிய நிலையில் அவரது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர், வலியால் துடித்து அதன் பிறகு காயத்திற்கு மருந்து போட அங்கிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மைதானத்தில் 4 பிட்ச்கள், இரண்டு பயிற்சி தடங்கள், உடற்பயிற்சி கூடம், கேண்டீன், போட்டியை காண வரும் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Natrajan's Finger was Jammed into Door.

📹 (Ilampillai_Memes / Instagram) pic.twitter.com/W6M4qttxJS

— CricketGully (@thecricketgully)

 

click me!