பாபா அபராஜித்தின் அதிரடியால் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 159 ரன்கள் குவிப்பு!

Published : Jun 24, 2023, 05:30 PM IST
பாபா அபராஜித்தின் அதிரடியால் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 159 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 159 ரன்கள் குவித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போன்று சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்; வீடியோ காலில் விஜய் சங்கர்!

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:

பாபா அபராஜித் (கேப்டன்), எஸ் ஹரிஷ் குமார், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), லோகேஷ் ராஜ், எஸ் மதன் குமார், பிரதோஷ் ஃபால், ராஹில் ஷா, ராமலிங்கம் ரோகித், சஞ்சய் யாதவ், உதிரசாமி சசிதேவ், எம் சிலம்பரசன்

நெல்லை ராயல் கிங்ஸ்:

அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசாமி (விக்கெட் கீப்பர்), ரித்திக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி சுகேந்திரன், லக்‌ஷ்மேலா சூர்யபிரகாஷ், லக்‌ஷய் ஜெயின், என் எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, சந்தீப் வாரியர், எஸ் மோகன் பிரசாத்

TNPL 2023: முதலிடம் பிடிக்குமா நெல்லை? டாஸ் வென்ற சேப்பாக்கம் பேட்டிங்!

தற்போது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இதில், கேப்டன் பாபா அபராஜித் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் குவித்தார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு: ஓரங்கட்டப்பட்ட சர்பராஸ் கான், ஹனுமா விஹாரி!

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சு தரப்பில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். லக்‌ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளும், மோகன் பிரசாத் மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறும் ஜஸ்ப்ரித் பும்ரா!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..