கிரிக்கெட் வாழ்க்கையில், என்னை விட எனது அப்பா தான் அதிகம் பாதிக்கப்பட்டார் – ரவிச்சந்திரன் அஸ்வின்!

By Rsiva kumar  |  First Published Jun 20, 2023, 5:18 PM IST

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை விட எனது குடும்பம், எனது அப்பா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதில், அஸ்வின் இடம் பெறாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இது குறித்து அஸ்வின் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

இன்னொரு ரூ.10 கோடி சேர்த்துக்கோங்க: வைரலாகும் விராட் கோலியின் இன்ஸ்டா ஜிம் ஒர்க் அவுட் வீடியோ!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இங்கிலாந்தில் தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடந்து வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் முதல் இன்னிங்ஸ்லும் 4 விக்கெட்டுகள், 2ஆவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுக்ள் கைப்பற்றினார். இதை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் ஏன் அஸ்வினை அணியில் சேர்க்காமல் விட்டார்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.

முதல் வெற்றிக்காக போராடும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: நெல்லை ராயல் கிங்ஸ் உடன் பலப்பரீட்சை!

இது குறித்து அஸ்வின் கூறியிருப்பதாவது: நான் அதிகளவில் யோசிப்பேன் என்று என்னை பலரும் குறி வைத்து செயல்படுகிறார்கள். ஒரு வீரர் 15 முதல் 20 போட்டிகளில் விளையாடப் போகிறார் என்று தெரிந்தால், அவர் அதிகம் யோசிக்கவே மாட்டார். ஆனால், நீங்கள் ஓரிரு போட்டிகளில் தான் விளையாடப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதிகம் யோசிப்பீர்கள்.

ரூ.800 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் மாமியார் ஷீலா சிங்!

அப்படி யோசிப்பது தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது. நீ 15 போட்டிகளில் விளையாடப் போகிறாய், உன்னை அணியே பார்த்துக் கொள்ளும், உனக்கு எல்லா பொறுப்புகளும் வழங்கப்படும். கேப்டன் பொறுப்பும் வழங்கப்படும் என்றெல்லாம் கூறினால், நான் ஏன் தேவையில்லாதவை பற்றி யோசிக்கப் போகிறேன்.

இதன் காரணமாக, இவர் அதிகம் சிந்திப்பார், அவர் அதிகம் சிந்திப்பார் என்று சொல்வது சரியானது கிடையாது. ஏனென்றால், அவர், எப்படிப்பட்ட பயணத்தில் இருக்கிறார் என்று அவருக்கு மட்டுமே தெரியும். நான் அதிகம் யோசிப்பேன் என்று எனக்கு எதிராக உருவாக்கப்பட்டது. எனது பெயர் கேப்டன் பதவிக்கு வரும் போதெல்லாம், அப்போதெல்லாம் சிலர் இந்திய அணி வெளிநாட்டிற்கு சென்று விளையாடப் போகிறது என்றால், அதில் அஸ்வின் பெயர் இருக்காது. அப்படியிருக்கும் போது அவர் கேப்டனாக மாற்றுவீர்கள் என்று பேசுகிறார்கள்.

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தேர்வாளராக இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமனம்!

நான் அணியில் இருக்கிறேனா? இல்லையா? என்பதை என்னால், சொல்ல முடியாது. ஆனால், எனது இடத்திற்கான வாய்ப்பை என்னால், கண்டிப்பாக உருவாக்கி அதனை பெற முடியும். ஆகையால், இந்த விஷயத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னைவிட எனது குடும்பம் தான் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.

என்னால், எந்தப் போட்டியிலும் எளிதாக நெருக்கடி இல்லாமல் விளையாட முடியும். ஆனால், எனக்காக எனது அப்பா தான் ஒவ்வொரு போட்டியையும் உணர்ச்சிப்பூர்வமாக பார்ப்பார். இதனால் அவருக்கு தான் அதிக பாதிப்பும் நெருக்கடியும் ஏற்படுகிறது. தற்போது அவருக்கு இதய பிரச்சினை உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!