உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அஜிங்க்யா ரஹானே தொடர்ந்து கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வருகிறார்.
இந்திய அணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று விளையாடி வருபவர் அஜிங்க்யா ரஹானே. இதுவரையில் 83 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ரஹானே 5066 ரன்களும், 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2962 ரன்களும் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடினார்.
ஜெர்மனி அணியிடம் ஷூட் அவுட்டில் இந்தியா தோல்வி – கட்டாய வெற்றியை நோக்கி ஜப்பானுடன் பலப்பரீட்சை!
இதே போன்று கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடினார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடினார். இந்த நிலையில் தான் இந்திய அணியில் இடம் பெற வேண்டிய ரஞ்சி டிராபி தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதில், மும்பை அணிக்காக விளையாடி வரும் ரஹானே தொடர்ந்து கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறி வருகிறார்.
பேட்டிங்கில் கோல்டன் டக் – பீல்டிங்கில் கலக்கிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ!
ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட ரஹானே, நிதிஷ் குமார் ரெட்டியின் ஓவரில் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று மும்பை மற்றும் கேரளா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதும் கூட ரஹானே பசில் தம்பி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது ரஹானேவிற்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தும் ரஹானேவிற்கு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிளேயிங் 11ல் இடம் கிடைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராவில் முடிந்த முதல் சூப்பர் ஓவர் – 2ஆவது சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!