IPL 2023: ஐபிஎல்லில் இவர்கள் தான் கிங்: ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 19 வெற்றி!

Published : Apr 02, 2023, 07:01 PM IST
IPL 2023: ஐபிஎல்லில் இவர்கள் தான் கிங்: ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 19 வெற்றி!

சுருக்கம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 மைதானங்களில் நடக்கும் 10 அணிகளின் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 3ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அசால்ட்டா ஊதி தள்ளிய சஞ்சு சாம்சன்!

இதையடுத்து பெங்களூருவில் இன்று நடக்கும் 5ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரையில் நடந்த 15 சீசன்களில் இரு அணிகளும் 32 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் 19 போட்டியிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, ரன்களைப் பொறுத்தவரையில், விராட் கோலி 6624 ரன்கள் குவித்துள்ளார். ரோகித் சர்மா 5879 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆர்சிபிக்குள்ள நடந்த பயிற்சி போட்டி; 55 பந்துகளில் சதம் விளாசிய மைக்கேல் பிரேஸ்வெல்!

இதுவரையில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் வென்றுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறை கூட சாம்பியனாகவில்லை. கடந்த 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி கண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி புனேயில் நடந்தது. இதில், ஆர்சிபி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. இதில் அனுஜ் ராவத் 66 ரன்களும், விராட் கோலி 48 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட்டர்; முன்னாள் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சலீம் துரானி காலமானார்!

இந்த நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 3 முறை இறுதிப் போட்டிக்கு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அதனுடைய ஹோம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. ரசிகர்களுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியில், பாப் டூ பிளசிஸ், மேக்ஸ்வெல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேஷாய், பின் ஆலென் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதே போன்று, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டிம் டேவிட், திலக் வர்மா, கேமரூன் க்ரீன் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023: கத்துக்குட்டி புவனேஷ்வர் குமார் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் வெற்றி வாகை சூடுமா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!