ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் நேற்று(டிசம்பர் 23) கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் 2வது உச்சபட்ச விலை கொடுத்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்களும் மேட்ச் வின்னர்களுமான ஹர்திக் பாண்டியா மற்றும் கைரன் பொல்லார்டு ஆகிய இருவருமே அணியில் இல்லாத நிலையில், அணியின் பேட்டிங் ஆர்டரை பந்துவீசக்கூடிய ஒரு வீரரை வைத்து அந்த இடத்தை நிரப்பும் முனைப்பில் கேமரூன் க்ரீனை பெரிய தொகைக்கு எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன்..! யார் யாருக்கு அணியில் இடம்..?
கடந்த சீசனில் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஆடாத நிலையில், அடுத்த சீசனில் கண்டிப்பாக ஆடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் அதிவேக மிரட்டல் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஆர்ச்சர். இவர்கள் இருவருமே 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்கள். நல்ல வேகத்தில் துல்லியமான லைன் & லெந்த்தில் வீசக்கூடிய பவுலர்கள். இவர்கள் இருவரும் அடுத்த சீசனில் இணைந்து ஆடுவதால் எதிரணிகள் இப்போதே பீதியில் இருக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மற்றும் மிரட்டலான 2 ஃபாஸ்ட் பவுலர்கள் இணைந்து ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலம். ரோஹித் சர்மா - இஷான் கிஷன் தொடக்க வீரர்கள். 3ம் வரிசையில் கேமரூன் க்ரீன், 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆடுவார்கள். அதன்பின்னர் திலக் வர்மா, டிம் டேவிட் மற்றும் இளம் டிவில்லியர்ஸ் என்றழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் ஆடுவார்கள். எனவே பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது.
ஸ்பின்னர்களாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சைனாமேன் பவுலர் குமார் கார்த்திகேயா மற்றும் ஸ்பின் ஆல்ரவுண்டர் ரித்திக் ஷோகீன் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஆர்ச்சர் ஆகிய இருவரும் ஆடுவார்கள். எனவே பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மிக வலுவான அணியாக, அடுத்த சீசனில் கம்பேக் கொடுக்கிறது 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்.
IPL 2023: அடுத்த கேப்டன் யார்..? சிஎஸ்கே சி.இ.ஓ தகவல்
மும்பை இந்தியன்ஸின் வலுவான ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிவால்ட் பிரெவிஸ், ரித்திக் ஷோகீன், குமார் கார்த்திகேயா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்ப்ரித் பும்ரா.