BAN vs IND: சட்டையையும் கழட்டி மாட்டுங்கடா.. வங்கதேச வீரர்களின் செயலால் கடும் ஆத்திரமடைந்த கோலி.! வைரல் வீடியோ

Published : Dec 24, 2022, 06:34 PM IST
BAN vs IND: சட்டையையும் கழட்டி மாட்டுங்கடா.. வங்கதேச வீரர்களின் செயலால் கடும் ஆத்திரமடைந்த கோலி.! வைரல் வீடியோ

சுருக்கம்

2வது டெஸ்ட் போட்டியின் போது நேரத்தை கடத்த முயன்ற வங்கதேச வீரர்கள் மீது விராட் கோலி கோபமடைந்த வீடியோ வைரலாகிவருகிறது.  

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 227 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி ரிஷப் பண்ட் (93) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின்(87) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் அடித்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடிக்கு மிக முக்கியமான பதவி..!

87 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 145 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய இந்திய அணி 37 ரன்களுக்கே ராகுல், கில், புஜாரா, கோலி ஆகிய நால்வரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 3ம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 100 ரன்கள் தேவை.

IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன்..! யார் யாருக்கு அணியில் இடம்..?

இந்த போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் சில ஓவர்கள் எஞ்சியிருக்க, 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹுசைன் மற்றும் ஜாகிர் ஹசன் ஆகிய இருவரும் டிரிங்ஸ் குடிப்பது, பேட்டை மாற்றுவது, ஷூ கயிறை கழற்றி கட்டுவது என்று வேண்டுமென்றே நேரத்தை கடத்தினர். அதனால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த விராட் கோலி, டிஷர்ட்டையும் கழற்றி மாட்டுங்க என்று செம கடுப்பில் செய்கை செய்தார். அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?