IPL 2023: பும்ராவுக்கு மாற்றாக ஆர்சிபி முன்னாள் வீரரை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்

Published : Mar 31, 2023, 07:01 PM ISTUpdated : Mar 31, 2023, 07:03 PM IST
IPL 2023: பும்ராவுக்கு மாற்றாக ஆர்சிபி முன்னாள் வீரரை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனிலிருந்து காயத்தால் விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு மாற்று வீரராக முன்னாள் ஆர்சிபி வீரரான சந்தீப் வாரியரை  ஒப்பந்தம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.  

ஐபிஎல் 16வது சீசன் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கியது. அரிஜித் சிங்கின் பாடல், தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடனம் என ஆட்டம்பாட்டத்துடன் ஐபிஎல் தொடங்கியுள்ளது.  இன்று அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.

அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. 5 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி, 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் வழக்கம்போலவே வலுவான அணியுடன் களமிறங்குகிறது.

IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். சமகாலத்தின் தலைசிறந்த மிரட்டலான ஃபாஸ்ட்பவுலர்களான பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் காயம் காரணமாக பும்ரா இந்த சீசனிலிருந்து விலகிவிட்டார்.

ஆனாலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் இருப்பதால் அவரது தலைமையில் பவுலிங் யூனிட் அசத்த காத்திருக்கிறது. பும்ரா இல்லாத குறையை ஆர்ச்சர் கண்டிப்பாக தீர்த்துவைப்பார். ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனும் பந்துவீசுவார். ஆனாலும் பும்ரா இல்லாதது இழப்புதான். 

IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

குறிப்பாக டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான பும்ரா இல்லாததால், டெத் ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கண்டிப்பாக மிஸ்செய்யும். இந்நிலையில், அவருக்கு பதிலாக சந்தீப் வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஃபாஸ்ட் பவுலரான சந்தீப் வாரியர் ஐபிஎல்லில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 5 போட்டிகளில் ஆடி வெறும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளில் ஆடியுள்ளார் சந்தீப் வாரியர். இவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. இளம் வீரர் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன்!
இந்தியாவில் விளையாட முடியாது.. வங்கதேசம் திட்டவட்டம்.. 'ஆப்பு' வைக்கும் ஐசிசி.. அதிரடி மூவ்!