WPL 2023: ஹைலி மேத்யூஸ் - நாட் ஸ்கிவர் பிரண்ட் சேர்ந்து ஆர்சிபியை அடித்து நொறுக்கினர்.! மும்பை அணி அபார வெற்றி

Published : Mar 06, 2023, 11:59 PM ISTUpdated : Mar 07, 2023, 12:05 AM IST
WPL 2023: ஹைலி மேத்யூஸ் - நாட் ஸ்கிவர் பிரண்ட் சேர்ந்து ஆர்சிபியை அடித்து நொறுக்கினர்.! மும்பை அணி அபார வெற்றி

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.   

மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸும், முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தோல்வியடைந்த ஆர்சிபி அணியும் இன்றைய போட்டியில் ஆடின.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பிலும், ஆர்சிபி அணி வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மோதுகின்றன. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

”தாராவி தெருக்கள் டூ WPL” வறுமையுடன் கனவை துரத்தி சாதித்த சிம்ரன் ஷேக்..! சாதிக்க துடிப்பவர்களுக்கான உத்வேகம்

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, திஷா கசட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹீதர் நைட், கனிகா அஹுஜா, மேகன் ஸ்கட், ஷ்ரேயாங்கா பாட்டீல், பிரீத்தி போஸ், ரேணுகா தாகூர் சிங்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்திமனி கலிதா, சாய்கா இஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 23 ரன்களும், டிவைன் 16 ரன்களும் அடித்தனர். கசட், ஹீதர் நைட் ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகினர். ரிச்சா கோஷ் 26 பந்தில் 28 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ஷ்ரேயங்கா பாட்டீல் அதிரடியாக ஆடி 15 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடிக்க, ஆர்சிபி அணி 155 ரன்கள் அடித்தது.

IND vs AUS: அகமதாபாத் பிட்ச் இப்படித்தான் இருக்கணும்.. இல்லைனா ஆப்புதான்..! கவாஸ்கர் அதிரடி

156 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை யஸ்டிகா பாட்டியா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஹீலி மேத்யூஸ் மற்றும் நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி 15வது ஓவரில் இலக்கை அடித்து மும்பை இந்தியன்ஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ஹீலி மேத்யூஸ் 77 ரன்களும், பிரண்ட் 29 பந்தில்55 ரன்களையும் குவித்தனர்.

இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்ற நிலையில், ஆர்சிபி ஆடிய 2 போட்டிகளிலும் தோற்றது. 
 

PREV
click me!

Recommended Stories

வீரர்களுக்காக கண்கொத்தி பாம்பாய் காத்திருக்கும் அணிகள்.. அபுதாபியில் இன்று IPL மினி ஏலம்
IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!