#T20WorldCup தோனியோட மாஸ்டர்மைண்டும் கோலியும் சேர்ந்தால் செம மாஸ்! இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்த போறாங்க

By karthikeyan VFirst Published Oct 11, 2021, 10:10 PM IST
Highlights

தோனியின் மாஸ்டர்மைண்டும் கேப்டன் விராட் கோலியும் சேர்ந்து டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17 முதல் தொடங்குகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிக முக்கியமான தொடர். இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை தன்னகத்தே கொண்டுள்ள விராட் கோலி, முதல் முறையாக ஒரு ஐசிசி டிராபியை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.

மேலும், இந்த டி20 உலக கோப்பையுடன் டி20 அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் விலகுகிறார். டி20 அணி கேப்டனாக தனது கடைசி தொடராக அமைந்துள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் கோலி.

இந்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகாராக முன்னாள் ஜாம்பவான் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் நியமனம் இந்திய அணிக்கு கண்டிப்பாக பெரியளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்.! ரமீஸ் ராஜா கருத்து

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், முதல் ஐசிசி கோப்பையை தூக்க துடிக்கும் விராட் கோலிக்கு தோனியின் சப்போர்ட் பெரியளவில் உதவிகரமாக அமையும். திரைமறைவில் நடக்கும் விஷயங்கள் ஒரு அணிக்கு மிக முக்கியம். வியூகங்கள், ஹோம் ஒர்க், விவாதங்கள், திட்டங்கள் ஆகியவை மிக முக்கியம். தோனி மாதிரியான ஒரு வீரர் இதையெல்லாம் பார்த்துக்கொள்வார். எனவே தோனியின் இருப்பு, இந்திய அணியை வலுப்படுத்தும். தோனியின் மாஸ்டர்மைண்டும், கோலியும் சேர்ந்து டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்தப்போகிறது என்றார் எம்.எஸ்.கே.பிரசாத்.
 

click me!