IPL 2021 #RCBvsKKR எலிமினேட்டர் போட்டி: டாஸ் ரிப்போர்ட்..!

Published : Oct 11, 2021, 07:23 PM IST
IPL 2021 #RCBvsKKR எலிமினேட்டர் போட்டி: டாஸ் ரிப்போர்ட்..!

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இன்று ஷார்ஜாவில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியும் கேகேஆரும் மோதுகின்றன.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி, 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ளும். அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி, ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

கேகேஆர் அணியும் அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!