IPL 2021 #RCBvsKKR சுனில் நரைனின் படுசூப்பரான பவுலிங்கில் கேகேஆரிடம் மண்டியிட்டு சரணடைந்த ஆர்சிபி..!

Published : Oct 11, 2021, 09:17 PM IST
IPL 2021 #RCBvsKKR சுனில் நரைனின் படுசூப்பரான பவுலிங்கில் கேகேஆரிடம் மண்டியிட்டு சரணடைந்த ஆர்சிபி..!

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் எலிமினேட்டரில் ஆர்சிபி அணியை  20 ஓவரில் 138  ரன்களுக்கு சுருட்டியது கேகேஆர் அணி.  

ஐபிஎல் 14வது சீசனில் முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இன்று ஷார்ஜாவில் நடந்துவரும் எலிமினேட்டரில் ஆர்சிபியும் கேகேஆரும் ஆடிவருகின்றன.

நாக் அவுட் போட்டியான இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

தேவ்தத் படிக்கல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, ஸ்ரீகர் பரத் 9 ரன்னிலும், நன்றாக ஆடிய கேப்டன் கோலி 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய சுனில் நரைன், மற்றொரு சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸையும் 11 ரன்னில் போல்டாக்கினார். இந்த சீசனில் அபாரமாக ஆடிவந்த மேக்ஸ்வெல்லை 15 ரன்னில் நரைன் வீழ்த்தினார்.

கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், கேஎஸ் பரத் ஆகிய ஆர்சிபி அணியின் 4 முக்கியமான வீரர்களையும் வீழ்த்தி ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக கேகேஆர் பக்கம் திருப்பினார் சுனில் நரைன். ஆர்சிபி அணியின் பின்வரிசை வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 20 ஓவரில்ம் 138 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

139 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டுகிறது கேகேஆர் அணி. இந்த இலக்கை கேகேஆர் அணி அடித்துவிடுவதற்கான வாய்ப்பு மிக அருமையாக இருக்கிறது. எனவே ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
 

PREV
click me!

Recommended Stories

ICC Rankings: நம்பர் 1 இடத்தை இழந்த அபிஷேக் சர்மா! புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்
Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!