தனது ஃபர்ஸ்ட் டி20, முதல் ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறிய தோனி!

By Rsiva kumar  |  First Published Jul 7, 2023, 7:41 AM IST

தான் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலும் சரி, முதல் டி20 போட்டியிலும் சரி தோனி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பிறந்தவர் தான் மகேந்திர சிங் தோனி. தான் ஒரு கிரிக்கெட் வீரராக வந்து இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை புரிவேன் என்று தோனி அப்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

கங்குலி, சச்சின் யாரும் படைக்காத சாதனையை படைத்த தோனி!

Tap to resize

Latest Videos

ஆரம்பத்தில் கால்பந்து விளையாடி வந்த தோனி, கிரிக்கெட் மீது கவனத்தை செலுத்தி முதலில் விக்கெட் கீப்பராக பயிற்சியை மேற்கொண்டார். அதன் பிறகு பேட்டிங்கிலும் பயிற்சியை தொடங்கி உள்ளூர் போட்டிகளில் அதுவும் பீகார் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார்.

ஹைதராபாத்தில் 52 அடியில் கட் அவுட்; தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!

அப்போது தான் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். முதலில் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக  டிசம்பர் 23, 2004 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி ஒரு பந்து தான் விளையாடினார். அந்தப் பந்திலேயும் ரன் அவுட் செய்யப்பட்டார். எனினும், அந்தப் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் சவுரவ் கங்கிலி தான் கேப்டனாக இருந்தார்.

தோனியின் உருவம் பொறித்த புகைப்படத்தை பரிசாக வழங்கிய ரசிகர்: வைரலாகும் புகைப்படம்!

இதே போன்று டிசம்பர் 2, 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி 53 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனினும், இந்தப் போட்டி மோசமான வானிலை காரணமாக டிராவில் முடிந்தது. முதல் 3 நாட்கள் போட்டி மழை, மோசமான வானிலை காரணமாக நடக்கவில்லை. கடைசி 2 நாட்கள் மட்டுமே போட்டி நடந்தது.

2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

இதையடுத்து 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியிலும் தோனி 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி தனது கடைசி டி20 போட்டியில் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக இருந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையும் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தோனி தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் முதல் உலக ரசிகர்கள் வரையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

- T20 World Cup in 2007.
- ODI World Cup in 2011.
- Champions Trophy in 2013.

From ticket collector to Trophy collector in World Cricket, one of the ultimate stories in world cricket. pic.twitter.com/UW3xM3TLLE

— Johns. (@CricCrazyJohns)

 

click me!