சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டிகளுக்கு பிறகு எம்.எஸ்.தோனி, ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமல் தனது ஓய்வறைக்கு சென்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான 68ஆவது லீக் போட்டி நேற்று சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலி, ஃபாப் டூப்ளெசிஸ், ரஜத் படிதார் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரது அதிரடியால் 218 ரன்கள் குவித்தது.
2ஆவது இடத்திற்கு செல்லுமா சன்ரைசர்ஸ்? – டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!
undefined
You Can Clearly See. Its Matter Of 30 Seconds
Ms Dhoni Couldn’t Walk 50meters For 30 Seconds To Shake Hands
He Is 42 Years Captain Cool For Real 💥
pic.twitter.com/AduEiKhK0u
பின்னர் 201 ரன்கள் எடுத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் ரச்சின் ரவீந்திரா மட்டுமே அதிரடியாக விளையாடி 61 ரன்கள் எடுத்தார். கடைசியில் இணைந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் ஒரளவு ரன்கள் எடுத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை.
A Match to be remembered for years
What a final over 🔥 pic.twitter.com/AxZkxnQPfw
இறுதியாக 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆர்பிசி கடைசியாக விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. இதன் மூலம் 9ஆவது முறையாக ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது.
இதையடுத்து ஆர்சிபி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போட்டிக்கு பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்கு தோனி முதலில் வந்தார். அவரைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியினர் வரிசையாக வந்தனர். அப்போது தோனி மைதானத்திலிருந்த ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமல் வெளியில் டக்கவுட்டில் அமர்ந்திருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசியோ என்று ஒவ்வொருவருக்கும் கை கொடுத்துவிட்டு தனது ஓய்வறைக்கு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு தோனி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ஜியோ சினிமாவில் 50 கோடி பார்வையாளர்களை கடந்து RCB vs CSK போட்டி சாதனை!
The classless RCB players who took turns to do cartwheels on the field like they had won the IPL trophy making the 5 times champions CSK team wait forever. Cricbuzz rightly criticised the RCB players for not shaking hands with . No class.
Apni Aukaat mat bhulo pic.twitter.com/iDpiu4Xe1k