
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இது அவரோட ஏரியா, இவருக்குதான் பிட்ச் பத்தி எல்லாம் தெரியும், இவர தூக்கிடாதீங்க: சபா கரீம் கோரிக்கை!
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் நடக்கிறது. சென்னை போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த தல தோனிக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், விராட் கோலி, முகமது சிராஜ், புஜாரா, அக்ஷர் படேல் என்று ஒட்டு மொத்த இந்திய அணியினரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
கோலி - தோனியை ஓபனிங் ஆட வச்சு நான் வேடிக்கை பார்ப்பேன் - ஆரிசிபி வீராங்கனை எலைஸ் பெர்ரி நச் பதில்!
இந்த நிலையில், சென்னையில் பயிற்சி மேற்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இது குறித்த தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் தோனி மீது மட்டும் யாரும் வண்ணம் பூசவில்லை. ஹோலி கொண்டாட்டத்திலிருந்து தல தோனி நேக்காக எஸ்கேப் ஆகியுள்ளார்.
மகளிர் தினத்தில் குவா குவா சத்தம்: தந்தை ரூபத்தில் பிறந்த மகள்- உமேஷ் யாதவ்விற்கு குவியும் வாழ்த்து!