கோலி - தோனியை ஓபனிங் ஆட வச்சு நான் வேடிக்கை பார்ப்பேன் - ஆரிசிபி வீராங்கனை எலைஸ் பெர்ரி நச் பதில்!

By Rsiva kumar  |  First Published Mar 8, 2023, 2:21 PM IST

தோனி மற்றும் விராட் கோலி இருவரையும் ஓபனிங் ஆட வைத்து நான் வேடிக்கை பார்ப்பேன் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வீராங்கனை எலைஸ் பெர்ரி தெரிவித்துள்ளார்.
 


மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 5 அணிகள் கலந்து கொண்ட இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 8 போட்டிகளில் பங்கேற்கும். இதில், புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். கடைசி இடம் பிடிக்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும். அந்த வகையில் தற்போது ஒவ்வொரு அணியும் 2 போட்டிகளில் விளையாடியுள்ளன.

India vs Australia: முதல் முறையாக அகமதாபாத்தில் களமிறங்கும் ஆஸ்திரேலியா: இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!

Tap to resize

Latest Videos

அதன்படி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிகள் 2 போட்டிகளில் விளையாடி 2லும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்கள் பிடித்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் 2 போட்டியிலும் தோல்வியடைந்து கடைசி 2 இடங்கள் பிடித்துள்ளன. இன்று நடக்கும் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

மகளிர் தினத்தில் குவா குவா சத்தம்: தந்தை ரூபத்தில் பிறந்த மகள்- உமேஷ் யாதவ்விற்கு குவியும் வாழ்த்து!

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான எலைஸ் பெர்ரியிடம் போட்டியின் போது கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, விராட் கோலி அல்லது எம் எஸ் தோனி இருவரில் யாருடன் இணைந்து தொடக்க விராங்கனையாக களமிறங்குவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு எலைஸ் பெர்ரி, இருவரையும் தொடக்க வீரர்களாக இறங்க வைத்து நான் வேடிக்கை பார்ப்பேன் என்று புத்திச்சாலித்தனமாக பதிலளித்துள்ளார். இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட எலைஸ் பெர்ரி விக்கெட் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியை தொடர்ந்து சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா - வெளியானது முதல் பட அறிவிப்பு

click me!