அதிக விக்கெட்டு, அதிக ரன் பட்டியலிலும் டாப்பில் இருக்கும் குஜராத், அப்போ சிஎஸ்கே?

By Rsiva kumarFirst Published May 23, 2023, 3:04 PM IST
Highlights

அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த அணியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில், இன்று பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் மூன்றிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சிஎஸ்கே பற்றி நன்கு தெரிந்த சாய் கிஷோரை களமிறக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

இதுவரையில் விளையாடிய 14 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் தான் அதிக விக்கெட்டுகள், அதிக ரன்கள் எடுத்துள்ளனர். அதில், முகமது ஷமி 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதே போன்று சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானும் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

ஆரஞ்சு கேப் வச்சிருந்தும் பிளே ஆஃப் வராமல் போன ஃபாப் டூப்ளெசிஸ்!

மோகித் சர்மா 11 போட்டிகள் விளையாடி 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால், சென்னை அணியைப் பொறுத்த வரையில் துஷார் தேஷ்பாண்டே 14 போட்டிகள் விளையாடி 20 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மதீஷா பதிரனா 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்து ரஷீத் கான் பர்பிள் கேப் பெற்றுள்ளார். விக்கெட்டுகள் மட்டுமின்றி அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் குஜராத் அணி தான் முதலிடம் பிடித்துள்ளது. இதில் 2 சதங்கள், 4 அரைசதங்கள் உள்பட 680 ரன்கள் எடுத்து சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து டெவான் கான்வே 585 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக பிளே ஆஃப் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்னாகும்?

சென்னை அணியில் இதுவரையில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியைத் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.

12ஆவது முறையாக பிளே ஆஃபில் சென்னை, தொடர்ந்து 2 ஆவது முறையாக குஜராத்!

click me!