சென்னைக்கு எதிராக இன்று நடக்கும் முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் கிஷோரை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 3 போட்டிகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 16ஆவது சீசனும் முடியப் போகிறது. இந்த சீசனில் தற்போது குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
ஆரஞ்சு கேப் வச்சிருந்தும் பிளே ஆஃப் வராமல் போன ஃபாப் டூப்ளெசிஸ்!
இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் சுற்று நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
மழை காரணமாக பிளே ஆஃப் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்னாகும்?
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதே போன்று வாய்ப்பு கொடுக்கும் போது சாய் சுதர்சனும் சிறாப்பாக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடி வந்த மோகித் சர்மாவும் குஜராத் அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
12ஆவது முறையாக பிளே ஆஃபில் சென்னை, தொடர்ந்து 2 ஆவது முறையாக குஜராத்!
இன்று நடக்கும் போட்டியில் சேப்பாக்கத்தில் முதன் முறையாக களமிறங்கும் குஜராத், வெற்றி பெற வேண்டுமென்றால், சென்னையைப் போன்று 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும். ஏற்கனவே ரஷீத் கான் மற்றும் நூர் அஹமது குஜராத் அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இவர்களுடன் இணைந்து சாய் கிஷோரும் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இவர், சிஎஸ்கே அணியுடன் பல ஆண்டுகள் பயணித்துள்ளார். இதனால், இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சாய் கிஷோர் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?