இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வைத்திருந்த ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 3 போட்டிகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 16ஆவது சீசனும் முடியப் போகிறது. இந்த சீசனில் தற்போது குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
மழை காரணமாக பிளே ஆஃப் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்னாகும்?
இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் சுற்று நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
12ஆவது முறையாக பிளே ஆஃபில் சென்னை, தொடர்ந்து 2 ஆவது முறையாக குஜராத்!
ஆனால், சென்னை, குஜராத், லக்னோ மற்றும் மும்பை அணியைப் பொறுத்த வரையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் என்று பார்த்தால் சுப்மன் கில் தான் இருக்கிறார். அதுவும் அவர் 680 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவர் தான் ஆரஞ்சு கேப் வைத்திருந்தார்.
ஃபாப் டூப்ளெசிஸ்:
இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 730 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி 8 முறை அரைசதமும் அடித்துள்ளார். மேலும், 60 பவுண்டரிகள், 36 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன் முழுவதும் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து ஆரஞ்சு கேப் இவர் தான் வைத்திருந்தார்.
சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?
சுப்மன் கில்:
இதுவரையில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 680 ரன்கள் குவித்துள்ளார். இதில், 2 சதமும், 4 அரைசதங்களும் அடங்கும். அதோடு 67 பவுண்டரிகளும், 22 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 104* ரன்கள் எடுத்திருக்கிறார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 அரைசதங்கள் அடங்கும்.
மறைமுகமாக மோதிக் கொண்ட தோனி – ஜடேஜா: பிளே ஆஃபில் பாதிப்பை ஏற்படுத்துமா?
டெவான் கான்வே
இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய கான்வே 585 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில், 6 அரைசதங்கள் அடங்கும்.
ரிங்கு சிங்:
கொல்கத்தா அணியின் சிறந்த வீரராக இருந்த ரிங்கு சிங் இரண்டு முறை கடைசி ஓவரின் கடைசி பந்துகளில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இவர் ஒரு ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த சீசனில் 474 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2023 அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல்:
ஃபாப் டூப்ளெசிஸ் (ஆர்சிபி) – 14 போட்டிகள் – 730 ரன்கள்
சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) – 14 போட்டிகள் – 680 ரன்கள்
விராட் கோலி (ஆர்சிபி) – 14 போட்டிகள் – 649 ரன்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஆர்ஆர்) – 14 போட்டிகள் – 625 ரன்கள்
டெவான் கான்வே (சிஎஸ்கே) – 14 போட்டிகள் – 585 ரன்கள்