12ஆவது முறையாக பிளே ஆஃபில் சென்னை, தொடர்ந்து 2 ஆவது முறையாக குஜராத்!

By Rsiva kumar  |  First Published May 23, 2023, 11:28 AM IST

ஐபிஎல் சீசன்களில் இதுவரையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டுமே 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 16ஆவது சீசனுக்கான முதல் பிளே ஆஃப் சுற்று இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

சென்னை சூப்பர் கிங்ஸ்!

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இதுவரையில் 14 சீசன்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2019, 2021 என்று இதுவரையில் 11 முறை பிளே ஆஃப் விளையாடியுள்ளது. இன்று நடக்கும் போட்டியின் மூலமாக 12 ஆவது பிளே ஆஃப் போட்டியில் விளையாடுகிறது. இதுவரையில் 11 முறை பிளே ஆஃப் விளையாடியுள்ள சிஎஸ்கே 9 முறை இறுதிப் போட்டிக்கு சென்று 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. 5 முறை ரன்னர் அஃப் ஆக வந்துள்ளது.

சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

குஜராத் டைட்டன்ஸ்:

கடந்த 2022 ஆம் ஆண்டு சீசனில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சென்று வெற்றி பெற்று இறுதிப் போட்டி வரை சென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

கடந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பிளே ஆஃப் வரை சென்று எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது.

மும்பை இந்தியன்ஸ்:

இதுவரையில் 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்ற மும்பை இந்தியன்ஸ் 6 முறை இறுதிப் போட்டி வரை சென்று அதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைமுகமாக மோதிக் கொண்ட தோனி – ஜடேஜா: பிளே ஆஃபில் பாதிப்பை ஏற்படுத்துமா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

இதுவரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது. அதில் 3 முறி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இந்த முறை பிளே ஆஃப் வாய்ப்பு தகுதி பெறும் நிலையில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதுவரையில் கேகேஆர் அணி 6 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது. இதில், 3 முறை இறுதிப் போட்டிக்கு சென்று 2 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

நாளை காலை 4.30 மணிக்கு இங்கிலாந்து செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி!

டெல்லி கேபிடல்ஸ்:

இதுவரையில் டெல்லி அணி 6 முறை பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆனால், அதில் ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்று தோல்வி அடைந்து ரன்னர் அஃப் ஆக வந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், அதில் 2 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றது. அதில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஒரு போட்டியில் மட்டும் ஜெயிச்சிட்டால் திரும்ப வந்திருவோம் – உண்மையான ரோகித் சர்மாவின் வாக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரையில் 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் 2 முறை இறுதிப்போட்டிக்கு சென்று ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. அதுவும், ஐபிஎல் அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்ற அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் படைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்:

இதுவரையில் 2 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பறிகொடுத்து 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!