சேப்பாக்கம், பிளே ஆஃப்பில் தோனி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

By Rsiva kumar  |  First Published May 23, 2023, 10:40 AM IST

இதுவரையில் 24 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 472 ரன்கள் எடுத்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இரு அணிகளும் இதுவரையில் மோதிய 3 போட்டிகளில் மூன்றிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது.

மறைமுகமாக மோதிக் கொண்ட தோனி – ஜடேஜா: பிளே ஆஃபில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Tap to resize

Latest Videos

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி இதுவரையில் 24 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடி 472 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதே போன்று சேப்பாக்கம் மைதானத்தில் தோனி இதுவரையில் 61 போட்டிகளில் விளையாடி 1444 ரன்கள் குவித்துள்ளார். தோனி ஐபிஎல் வரலாற்றில் எந்த மைதானத்திலும் அதிக ரன்கள் குவித்ததே இல்லை.

நாளை காலை 4.30 மணிக்கு இங்கிலாந்து செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி!

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரையில் 247 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதுவரையில் சிஎஸ்கே அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5 முறை ரன்னர் அஃப் சாதனையையும் படைத்துள்ளது.

ஒரு போட்டியில் மட்டும் ஜெயிச்சிட்டால் திரும்ப வந்திருவோம் – உண்மையான ரோகித் சர்மாவின் வாக்கு!

click me!