ஐபிஎல் 16வது சீசனின் முதல் தகுதிப்போட்டியில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.
இன்று சென்னையில் நடக்கும் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். மே 24ம் தேதி நடக்கும் எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணி, முதல் தகுதிப்போட்டியில் தோற்கும் அணியை எதிர்கொள்ளும்.
இன்று சென்னையில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. பலமான 2 அணிகள் மோதும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா.
IPL 2023: ஆர்சிபியிலிருந்து விலகும் விராட் கோலி..? எந்த அணியில் இணைகிறார் தெரியுமா..?
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், தசுன் ஷனாகா, ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.