வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விலகியுள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியின் கடைசி நாள் மழையின் காரணமாக பாதிக்கப்படவே போட்டி டிரா செய்யப்பட்டது. இல்லையென்றால் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்திருக்கும். எனினும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி பிரிஜ்டவுனில் நடந்தது. இதில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முகமது சிராஜ் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை. மாறாக, முகேஷ் குமார், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றனர். ஹர்திக் பாண்டியா தான் முதல் ஓவரை வீசினார்.
ஜூன் 4 முதல் டி20 உலகக் கோப்பை: எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது தெரியுமா?
இந்த நிலையில், தான் ஏன் முகமது சிராஜ் முதல் ஒரு நாள் போட்டியில் இடம் பெறவில்லை என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன்படி, முகமது சிராஜிற்கு கணுக்கால் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் முதல் ஒரு நாள் போட்டியில் இடம் பெறவில்லை. இதே போன்று 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார்.
ஏன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடினார்? காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ!
ஏனென்றால், கணுக்கால் வலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும், அவர் இந்தியா திரும்பியுள்ளார். அவர் மட்டுமின்றி ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎஸ் பரத், நவ்தீப் சைனி, அஜின்க்யா ரஹானே ஆகியோரும் இந்தியா திரும்பியுள்ளனர்.
WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!
அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் தொடங்க உள்ள நிலையில், முகமது சிராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஒருநாள் போட்டிகள் கொண்ட அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிசிசிஐயின் மருத்துவ கண்காணிப்பில் இடம் பெற்றுள்ளார். 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் 2ஆவது போட்டியில் சிறந்த பந்து வீச்சாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 8 டி20 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளும், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.