ஜூன் 4 முதல் டி20 உலகக் கோப்பை: எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jul 29, 2023, 10:43 AM IST

வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 10 மைதானங்களில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்ந்து வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மிக பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரான ஜூன் 4 ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த டி20 உலகக் கோப்பை போட்டிகள் 10 மைதானங்களில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன. ஆதலால், இந்த இரு அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன.

ஏன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடினார்? காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ!

Tap to resize

Latest Videos

இது தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என்று 8 அணிகள் முந்தை டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து தகுதி பெற்றுவிட்டன. மேலும், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகள் தகுதிக்கு முந்தைய அணிகளுக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் டாப் இடங்களைப் பிடித்துள்ளன.

WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!

எஞ்சிய 5 இடங்கள் ரிஜினல் குவாலிஃபையர்ஸ்களாக இடம் பெறும். இது தவிர ஆசியாவிலிருந்து 2, ஆப்பிரிக்காவிலிருந்து 2, அமெரிக்காவிலிருந்து ஒன்று என்று அணிகள் இடம் பெறும். இதில் இந்த வார தொடக்கத்தில், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை பிராந்திய தகுதிச் சுற்றுகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றதன் மூலம் டி20 உலகக் கோப்பைத் தகுதியைப் பெற்றன. மற்றொரு குவாலிஃபையர் போட்டியில் கிழக்கு ஆசிய பசிபிக் அணியை வீழ்த்தி பப்புவா நியூ கினியா அணி டி20 உலகக் கோப்பைக்கான தகுதி பெற்றது.

திரும்ப வந்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பக்கா பிளான் போட்ட ரோகித் சர்மா: இந்தியா பீல்டிங் தேர்வு!

இந்த டி20 தொடரின் மூலமாக முதல் முறையாக 20 அணிகள் இடம் பெற்று விளையாட உள்ளன. கடந்த சீசனில் 16 அணிகள் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இடம் பெறும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெறும். இதில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இதில், கடைசியாக வரும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இந்த டி20 உலகக் கோப்பை தொடரானது, புளோரிடாவின் லாடர்ஹில், டல்லாஸ், மோரிஸ்வில்லே ஆகிய மைதானங்களில் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஐசிசி குழு அதிகாரிகள் அமெரிக்காவில் சில மைதானங்களை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

click me!