ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் பவுலர்களின் ரேங்கிங் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த முகமது சிராஜ், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ், 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அதிலும் சிறந்த பந்து வீச்சாக 60 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ், ஒரு முறை கூட 5 விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை. அவர், 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டுக்கு முன்னதாக ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் பவுலர்களின் ரேங்கிங் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருந்தார். ஆனால், ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கடைசியாக இலங்கைக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தன் பக்கமே கொண்டு வந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
முதல் உலகக் கோப்பையிலேயே துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை!
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அதுவும், இலங்கை அணியின் டாப் பேட்ஸ்மேன்களான பதும் நிசாங்கா 2 ரன்கள், குசால் மெண்டிஸ் டக் அவுட், சதிர சமரவிக்ரமா டக் அவுட், சரித் அசலங்கா டக் அவுட், தனஞ்சயா டி சில்வா 4 ரன்கள், தசுன் ஷனாகா டக் அவுட் என்று 3 வீரர்களை டக் அவுட் செய்துள்ளார்.
இந்த நிலையில், தான் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் பவுலர்களின் ரேங்கிங் பட்டியலில் முகமது சிராஜ் 9ஆவது இடத்திலிருந்து வேகமாக முன்னேறி 694 ரேட்டிங் உடன் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் 678 ரேட்டிங்கில் 2ஆவது இடமும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 677 ரேட்டிங்கில் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர்.
ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!