India vs New Zealand: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் கைப்பற்றி முகமது ஷமி சாதனை!

By Rsiva kumar  |  First Published Nov 15, 2023, 10:10 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் விக்கெட் எடுத்ததன் மூலமாக முகமது ஷமி உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.

India vs New Zealand: லட்டு மாதிரியான கேட்சை கோட்டைவிட்ட ஷமி – அதிர்ச்சியில் தலையில் கையை வைத்த ரசிகர்கள்!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணியினர் விக்கெட் கைப்பற்ற தடுமாறினர். மேலும், வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் கோட்டைவிட்டனர்.

50ஆவது சதம் அடித்து சரித்திர சாதனை: விராட் கோலியை கட்டியணைத்து பாராட்டு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!

இதையடுத்து ரோகித் சர்மா பவுலர்களை மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுத்தார். இந்த நிலையில் தான் முகமது ஷமி 32.2 ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தான் ஷமி தவறவிட்டார். இந்த நிலையில் அவரது விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஷமி தனது 50ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.

மேலும், உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடம் பிடித்துள்ளார். ஷமி 17 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 19 இன்னிங்ஸ்களிலும், லசித் மலிங்கா 25 இன்னிங்ஸ்களிலும், டிரெண்ட் போல்ட் 28 இன்னிங்ஸ்களிலும் 50 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்!

அதோடு, 795 பந்துகளில் ஷமி 50 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் டிரெண்ட் போல்டை தொடர்ந்து முகமது ஷமியும் இடம் பெற்றுள்ளார். கிளென் மெக்ராத் 71 விக்கெட்டுகள் உடன் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது வரையில் முகமது ஷமி 51 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

 

HISTORY BY SHAMI.......!!!!!! pic.twitter.com/6g80glaanV

— Johns. (@CricCrazyJohns)

 

click me!