ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய 28.5ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன் அடித்த கேட்சை முகமது ஷமி தவறவிடவே அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தலையில் கை வைத்த நிலை ஏற்பட்டது.
இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் 398 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில், தொடக்க வீர்ரகளான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருவரையுமே முகமது ஷமி தான் ஆட்டமிழக்கச் செய்தார். ஓபனிங் ஓவர்கள் வீசிய பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட் கைப்பற்றவில்லை.
இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் களமிறகி அதிரடியாக விளையாடி வருகின்றனர். இதில் இருவருமே அரைசதம் அடித்துள்ளனர். மிட்செல் சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் பும்ரா வீசிய 28.5ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்டுள்ளார். அப்போது, கேன் வில்லியம்சன் 52 ரன்கள் எடுத்திருந்தார். எனினும், தற்போது வரையில் நியூசிலாந்து அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணி வெற்றி பெற 114 பந்துகளில் 176 ரன்கள் எடுக்கவேண்டும்.
கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்!