டி20 உலக கோப்பையிலிருந்து காயத்தால் விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளில் ஆடி இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
டி20 உலக கோப்பையில் ஜடேஜா காயத்தால் ஆடாத நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ராவும் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகினார். அவரைத்தொடர்ந்து, ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சாஹரும் காயத்தால் விலகினார்.
undefined
இதையும் படிங்க - 15 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடும் இந்திய அணி..? பிசிசிஐ திட்டம்
பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர்.
இந்நிலையில், சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி, பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். சீனியர் ஃபாஸ்ட் பவுலரான முகமது ஷமி மிகச்சிறந்த பவுலர் தான் என்றாலும், கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பின் அவர் ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும்..? முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம் ஆருடம்
சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
ரிசர்வ் வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்